ஈரோட்டில் த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி- காவல்துறை நிபந்தனை விதிப்பு

#India #Meeting #Vijay #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
ஈரோட்டில் த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி- காவல்துறை நிபந்தனை விதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட கண்காணிப்பார் அனுமதி வழங்கியுள்ளார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு செய்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார். 

இந்து சமய அறநிலையத்துறை இடத்தை ரூ.50 ஆயிரம் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி என தகவல் வெளியானது. இந்நிலையில், 18ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல்துறையின் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.

அதன்படி, விஜய்யின் பிரச்சார வேனை சுற்றி நான்கு புறமும் வேனுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சுமார் 50 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும்.

நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஒவ்வொரு Box-லும் குடிநீர்வசதி செய்து தரப்படவேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை தாங்கள் மனுவில் குறிப்பிட்டதை விட மிகாமல் இருக்க வேண்டும்.

அவசர நிலைகளில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்திற்கு இடையே வர தனி வழி விடப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

                                                                        

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!