மரண அறிவித்தல் - அமரர் தியாகராசா பிரேமகாந்தன்

#SriLanka #Death #Lanka4 #Notice
Prasu
1 hour ago
மரண அறிவித்தல் - அமரர் தியாகராசா பிரேமகாந்தன்

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இல.674, 7ம் யூனிற், இராமநாதபுரம், கிளிநொச்சியை வதிவிடமாகவும் தற்போது தசரதன், சோரன்பற்று மாஞ்சோலை முருகன் கோவிலடி பளையில் வசித்து வந்தவருமான தியாகராசா பிரேமகாந்தன்(பிறேமன்- ஆசிரியர்-கிளி/முரசுமோட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை) அவர்கள் 05/11/2025 இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தியாகராசா(ஓய்வுநிலை அதிபர் - யா/புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம்) தங்கம்மா (ஓய்வுநிலை அதிபர் - கிளி/இராமநாதபுரம் கிழக்கு மகா வித்தியாலயம் ) தம்பதியினரின் அன்பு புதல்வனும், செல்வராசா மற்றும் மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும், ஷஜனி(ஆசிரியர்-கிளி/மாசார் அ.த.க. பாடசாலை) அவர்களின் பாசமிகு கணவரும், கவிநயன் அவர்களின் அன்புத்தந்தையும், கலையரசி(ஓய்வுநிலை பிரதி அதிபர்-கிளி/மத்திய ஆரம்ப வித்தியாலயம்), காலஞ்சென்ற பத்மகாந்தன்(சுவிஸ்), காலஞ்சென்ற கலைச்செல்வி (கனடா), கலைவதனி(கனடா), ஆகியயோரின் அன்பு சககோதரனும், காலஞ்சென்ற செல்வராசா(ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர்-கிளிநொச்சி கல்வி வலயம்), ஜெயகெளரி(லதா-சுவிஸ்), லோகநாதன்(கனடா), தர்மராசா(பொறியியலாளர்-கனடா), வினோத், ஜனனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (07/11/2025) வெள்ளிக் கிழமை பிற்பகல் 2 மணியளவில் பளை மாசாரிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக இராமநாதபுரம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனை வரும்ஏற்றுக்க கொள்ளுமாறு கேட்டுக்க கொள்கின்றோம்.

images/content-image/1762453938.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!