இன்றைய ராசிபலன் (22.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:
அசுவினி: முன்னேற்றமான நாள். உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். உங்கள் செயல்கள் லாபமாகும்.
கார்த்திகை 1: கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்சினை விலகும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும்.
ரோகிணி: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழிலில் இருந்த போட்டியாளர் விலகுவர்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: குழப்பம் தவிர்க்க வேண்டிய நாள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.
திருவாதிரை: நீங்கள் ஈடுபடும் வேலைகளில் சிறு சிறு தடைகள் தோன்றினாலும் முடிவு சாதகமாகும்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சிக்கேற்ற வருவாய் வரும். பணியிடத்தில் சிறு பிரச்னை ஏற்பட்டு மறையும்.
கடகம்:
புனர்பூசம் 4: பணியிடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
பூசம்: செயலில் நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும் என்றாலும் போராடி சாதிப்பீர்.
ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் ஆதாயமடைவீர்.
சிம்மம்:
மகம்: தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டிய நாள். மறைமுக எதிர்ப்பாளர்களை அறிவீர்கள்.
பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்.
உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத வேலையை முடிப்பீர். வருமானம் திருப்தி தரும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் கவனம் அவசியம்.
அஸ்தம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
சித்திரை 1,2: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
துலாம்:
சித்திரை 3,4: தெளிவாக செயல்பட்டு தேவைகளை அடையும் நாள். வியாபாரத்தில் வருமானம் கூடும்.
சுவாதி: உழைப்பு அதிகரிக்கும். மனம் குழப்பமடையும். செயல்களில் தடுமாற்றம் அடைவீர்.
விசாகம் 1,2,3: உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் தேடிவந்து சமாதானம் பேசுவர்.
விருச்சிகம்:
விசாகம் 4: செலவுகள் வழியே நினைத்ததை சாதிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
அனுஷம்: வாகன வகையில் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும்.
கேட்டை: எதிர்பாராத செலவுகள் தோன்றும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது அவசியம்.
தனுசு:
மூலம்: வரவால் வளம் காணும் நாள். நீங்கள் நினைத்திருந்த வேலைகள் நடந்தேறும்.
பூராடம்: வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.
உத்திராடம் 1: மூன்றாமிட ராகுவால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பொருளாதார நிலை உயரும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: வியாரத்தில் லாபம் காணும் நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள்.
திருவோணம்: நினைப்பதை சாதிப்பீர். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அவிட்டம் 1,2: உங்கள் அணுகுமுறையால் நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விஐபிகளால் உங்கள் வேலைகள் முடியும்.
சதயம்: பெரிய மனிதர்களின் ஆதரவால் நீங்கள் எடுத்த வேலைகள் வெற்றியாகும்.
பூரட்டாதி 1,2,3: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.
மீனம்:
பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் நிலவும்.
உத்திரட்டாதி: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்கள் முயற்சியில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும்.
ரேவதி: வழக்கமான வேலைகளில் ஆதாயம் காண்பீர். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது.
(வீடியோ இங்கே )



