இன்றைய ராசிபலன் (26.09.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:
அசுவினி: ஆரோக்கியம் மேம்படும். இழுபறியான வேலைகள் முடியும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
பரணி: உங்கள் முயற்சிக்குரிய ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.
கார்த்திகை 1: ஆறாமிட புதன், சூரியனால் மனதில் தெளிவு ஏற்படும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ரோகிணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.
மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் வருமானம் திருப்தி தரும். இழுபறியான பிரச்னைகளை பேசித்தீர்ப்பீர்கள்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: வருமானத்தில் இருந்த தடை விலகும். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
திருவாதிரை: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். நண்பர்கள் உதவியாக இருப்பர்.
புனர்பூசம் 1,2,3: உறவினர்கள் வீட்டு பிரச்னைகளை தீர்த்து வைப்பீர். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.
கடகம்:
புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றும்.
பூசம்: தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.
ஆயில்யம்: அவசர செயல்களால் சங்கடம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சிம்மம்:
மகம்: நினைத்ததை சாதிப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெரியோர் ஆதரவுடன்பிரச்னைக்கு முடிவு காண்பீர்.
கன்னி:
உத்திரம் 2,3,4: சாதகமான நாள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகி மகிழ்ச்சியான நிலை ஏற்படும்.
அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பிறரிடம் எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம்.
சித்திரை 1,2: அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர். உங்கள் செயல் மற்றவர்களால் பாராட்டப்படும்.
துலாம்:
சித்திரை 3,4: யோகமான நாள். உங்கள் அணுகுமுறையால் நீண்ட நாள் பிரச்னை முடிவிற்கு வரும்.
சுவாதி: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய வகையில் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.
விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத தடை ஏற்படும். அனைத்திலும் நிதானம் அவசியம்.
விருச்சிகம்:
விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று மதியம் வரை அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.
அனுஷம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்ப நெருக்கடி நீங்கும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.
கேட்டை: வெளியூர் பயணத்தால் மனதில் சோர்வு உண்டாகும். வரவை விட செலவு அதிகரிக்கும்.
தனுசு:
மூலம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூராடம்: விலகிச்சென்ற உறவினர்கள் வீடுதேடி வருவர். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்.
உத்திராடம் 1: குடும்ப பிரச்னைகள் முடியும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தை விருத்தி செய்வதற்குரிய வழிகளைக் கண்டறிவீர்.
திருவோணம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானத்தை வைத்து கடன்களை அடைப்பீர்.
அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று முடிப்பீர். உறவினர்கள் உங்களைத் தேடிவருவர்.
கும்பம்:
அவிட்டம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்.
சதயம்: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். பெரியோர் ஆதரவால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.
பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்கள் வீடுதேடி வருவர்.
மீனம்:
பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட்டு நன்மைகள் காண வேண்டிய நாள். முயற்சி இழுபறியாகும்.
உத்திரட்டாதி: தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பணியிடத்தில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும்.
ரேவதி: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும்.
(வீடியோ இங்கே )



