இன்றைய ராசிபலன் (21.09.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:
அசுவினி: முன்னோரை வழிபட்டு நன்மைகள் காணும் நாள். முயற்சிகள் இன்று வெற்றியாகும்.
பரணி: நீங்கள் எடுக்கும் வேலையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.
கார்த்திகை 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடியும். வரவேண்டிய பணம் வரும்.
ரோகிணி: தாய்வழி உறவுகளின் ஆதரவால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.
மிருகசீரிடம் 1,2: சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றி மறையும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.
திருவாதிரை: நீண்டநாள் பிரச்னை ஒன்றில் முடிவு காண்பீர்கள். திடீர் வரவால் நெருக்கடிகள் நீங்கும்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். உறவுகள் உங்களிடம் உதவிகேட்டு வருவர்.
கடகம்:
புனர்பூசம் 4: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றி அடைவீர்.
பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலைகள் சாதகமாகும்.
ஆயில்யம்: வியாபாரத்தில் உங்களது முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்:
மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். தடைபட்ட வேலை நடந்தேறும். வரவு திருப்தி தரும்.
பூரம்: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.
உத்திரம் 1: தொழிலில் உண்டான நெருக்கடி நீங்கும். முன்னோர் வழிபாடு நன்மை தரும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
அஸ்தம்: உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
சித்திரை 1,2: உங்கள் செல்வாக்கு உயரும். முடியாது என்று பிறர் சொன்ன வேலையை முடித்துக் காட்டுவீர்.
துலாம்:
சித்திரை 3,4: செயல்களால் செல்வாக்கு பெறும் நாள். பணியிடத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பர்.
சுவாதி: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை முடியும்.
விசாகம் 1,2,3: தொழில் முன்னேற்றமடையும். நண்பர்கள் உதவியால் உங்கள் வேலைகள் முடியும்.
விருச்சிகம்:
விசாகம் 4: சாதகமான நாள். தடைகளைத் தாண்டி வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்.
அனுஷம்: இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். புதிய முதலீடு செய்வதற்குமுன் நன்றாக யோசிக்கவும்.
கேட்டை: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பிறரால் முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்.
தனுசு:
மூலம்: யோகமான நாள். குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் கூடும்.
பூராடம்: திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
உத்திராடம் 1: உழைப்பால் உயர்வு காண்பீர். மனதில் இருந்த சங்கடங்கள் விலகும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.
திருவோணம்: பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.
அவிட்டம் 1,2: இன்று மாலைவரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனப் பயணத்தில் கவனம் தேவை.
கும்பம்:
அவிட்டம் 3,4: வருமானம் அதிகரிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.
சதயம்: உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
பூரட்டாதி 1,2,3: சிறுதொழில் செய்பவர்களுக்கு லாபம் கூடும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.
மீனம்:
பூரட்டாதி 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உடல்நிலை சீராகும்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர்.
ரேவதி: உங்கள் திறமை வெளிப்படும். முயற்சிக்கேற்ற வருமானம் வரும். பொருளாதார நிலை உயரும்.
(வீடியோ இங்கே )



