இன்றைய ராசிபலன் (19.09.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:
அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் போட்டியாளர் தொல்லை நீங்கும்.
பரணி: புத்தி சாதுரியத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
கார்த்திகை 1: சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்கள். புதிய வேலைகளை இன்று மேற்கொள்ள வேண்டாம்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: நினைத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
ரோகிணி: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், நிதானமாகச் செயல்படுவதும் நன்மையாகும்.
மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் நாள். உழைப்பு அதிகரிக்கும்.
திருவாதிரை: வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். பதட்டமின்றி செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பழைய பிரச்னை தீரும். தாய்வழி உறவினர்கள் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும்.
கடகம்:
புனர்பூசம் 4: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும் நாள். மனதில் தெளிவு பிறக்கும்.
பூசம்: வரவு அதிகரிக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் அக்கறை உண்டாகும்.
ஆயில்யம்: உங்களது முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.
சிம்மம்:
மகம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். காலையில் செலவு அதிகரித்தாலும் அதன்பின் எதிர்பார்த்த பணம் வரும்.
பூரம்: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் விருப்பம் எளிதாக பூர்த்தியாகும்.
உத்திரம் 1: வழிபாட்டால் மனம் தெளிவடையும். தேவைக்கேற்ற பணம் வரும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். தடைபட்ட வேலைகளை முடிப்பீர்.
அஸ்தம்: செயல்களில் லாபம் கூடும் என்றாலும், எதிர்பாராத செலவுளும் அலைச்சலும் ஏற்படும்.
சித்திரை 1,2: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் இணைவர். புதிய முதலீடுகள் இன்று வேண்டாம்.
துலாம்:
சித்திரை 3,4: எதிர்பார்த்த வருவாய் வரும். நேற்றைய நெருக்கடிகள் நீங்கும்.
சுவாதி: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் விருத்தியாகும்.
விசாகம் 1,2,3: சாதுரியமாக செயல்படுவீர். மற்றவரை அனுசரித்துச் சென்று நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்.
விருச்சிகம்:
விசாகம் 4: உங்கள் செயலில் ஆதாயம் காண்பீர். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள்.
அனுஷம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.
கேட்டை: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். இழுபறியான வேலைகள் நடந்தேறும்.
தனுசு:
மூலம்: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும்.
பூராடம்: பணியாளர்களுக்கு முதலாளியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும்.
உத்திராடம் 1: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
திருவோணம்: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வரவு செலவில் கவனம் தேவை.
அவிட்டம் 1,2: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். புதிய வேலைகளில் இன்று ஈடுபட வேண்டாம்.
கும்பம்:
அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடம் சரண் அடைவர்.
சதயம்: போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
பூரட்டாதி 1,2,3: உடல்நிலை சீராகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.
மீனம்:
பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். நிதானமாக செயல்பட்டு எடுத்த வேலைகளை முடிப்பீர்கள்.
உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.
ரேவதி: உறவினர்கள் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலை முடியும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
(வீடியோ இங்கே )



