இன்றைய ராசிபலன் (18.09.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (18.09.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன


மேஷம்:

அசுவினி: நெருக்கடி நீங்கி நினைத்ததை சாதிக்கும் நாள். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

பரணி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நிதி நிலை உயரும்.

கார்த்திகை 1: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வருமானம் திருப்தி தரும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறுவீர்.

ரோகிணி: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த ஆதாயம் வரும்.

மிருகசீரிடம் 1,2: யோசித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வருமானம் கூடும்

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வரவு செலவில் கவனமாக இருப்பது அவசியம்.

திருவாதிரை: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். சிலர் புதிய முயற்சியை மேற்கொள்வீர்.

புனர்பூசம் 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும். செலவிற்கேற்ற வரவு வரும்.

கடகம்:

புனர்பூசம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும்.

பூசம்: செயல்களில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

ஆயில்யம்: சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும். உறவினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பு இருக்கும்.

சிம்மம்:

மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். விரய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் அலைச்சலும் செலவும் கூடும்.

பூரம்: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். திடீர் செலவுகள் தோன்றும்.

உத்திரம் 1: எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர். வியாபாரத்தில் சில பிரச்னைகள் தோன்றும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். அமைதியாக செயல்பட்டு ஆதாயம் காண்பீர்.

அஸ்தம்: நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர். பொருளாதார நிலை உயரும். உங்கள் கனவு நனவாகும்.

சித்திரை 1,2: வியாபார விருத்திக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும்.

துலாம்:

சித்திரை 3,4: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.

சுவாதி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

விசாகம் 1,2,3: செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். செயல்களில் ஆதாயம் அதிகரிக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: நெருக்கடிகள் நீங்கும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும்.

அனுஷம்: மனதில் உண்டான குழப்பம் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கேட்டை: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். சங்கடங்களைக் கடந்து சாதனைப் புரிவீர்.

தனுசு:

மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

பூராடம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். நன்றாகப் பழகியவர்களும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர்.

உத்திராடம் 1: சந்திராஷ்டமம் தொடர்வதால் விழிப்புடன் செயல்படுவது நன்மையாகும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: இன்று உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையாகும்.

திருவோணம்: நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். பொருளாதார சிக்கல் நீங்கும்.

அவிட்டம் 1,2: எதிலும் இன்று அவசரம் வேண்டாம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: சாதகமான நாள். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

சதயம்: வியாபார பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தினர் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்.

பூரட்டாதி 1,2,3: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும்.

மீனம்:

பூரட்டாதி 4: செயல்களில் ஆதாயம் காணும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

உத்திரட்டாதி: சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சேமிப்பு உயரும்.

ரேவதி: இழுபறியாக இருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!