இன்றைய ராசிபலன் (17.09.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:
அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். நீங்கள் நினைப்பது நடந்தேறும்.
பரணி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்பத்தினர் விருப்பத்திற்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
கார்த்திகை 1: தடைபட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: வியாபாரிகளுக்கு விற்பனைக் கூடும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
ரோகிணி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும்.
மிருகசீரிடம் 1,2: தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர். மனதில் தெளிவு உண்டாகும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: வருவாயால் வளம் காணும் நாள். திருமண வயதினருக்கு வரன் வரும்.
திருவாதிரை: வியாபாரம் முன்னேற்றம் அடையும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.
புனர்பூசம் 1,2,3: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். தேடி வருவோருக்கு உதவிகள் செய்வீர்.
கடகம்:
புனர்பூசம் 4: வழிபாட்டில் மனம் செல்லும். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்.
பூசம்: உங்கள் செல்வாக்கு வெளிப்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
ஆயில்யம்: சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். உதவி என்று கேட்போருக்கு உதவி செய்வீர்.
சிம்மம்:
மகம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.
பூரம்: நீங்கள் நினைப்பது நடந்தேறும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.
உத்திரம் 1: நேற்றுவரை தடைபட்டிருந்த வேலைகள் இன்று நடந்தேறும். வராமல் இருந்த பணம் வரும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபம்தரும். வருமானம் அதிகரிக்கும்.
அஸ்தம்: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும்.
சித்திரை 1,2: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் கனவு இன்று நனவாகும்.
துலாம்:
சித்திரை 3,4: வியபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் அணுகுமுறையால் நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
சுவாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த தகவல் வரும்.
விசாகம் 1,2,3: எந்த ஒன்றிலும் இன்று உங்களின் நேரடிப் பார்வை தேவைப்படும்.
விருச்சிகம்:
விசாகம் 4: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். பெரியோரின் உதவி உங்கள் முயற்சியை லாபமாக்கும்.
அனுஷம்: சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கேட்டை: பிறரை அனுசரித்துச் செல்வீர்கள். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்.
தனுசு:
மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் எச்சரிக்கை அவசியம்.
பூராடம்: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். சிலருக்கு பிரச்னைகள் தேடிவரும்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் நீங்கள் வைத்த நம்பிக்கை இன்று எதிர்மறையாகும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். பண வரவில் இருந்த தடைகள் விலகும்.
திருவோணம்: சிந்தித்து செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
அவிட்டம் 1,2: வரவால் வளம் காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும்.
சதயம்: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
பூரட்டாதி 1,2,3: தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். உங்கள் செல்வாக்கு உயரும்.
மீனம்:
பூரட்டாதி 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.
உத்திரட்டாதி: உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.
(வீடியோ இங்கே )



