வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் இந்தியா மற்றும் அமெரிக்கா!

இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் குழு இன்று (16) புதுதில்லியில் இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) தலைமை பேச்சுவார்த்தையாளர் பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழு, தலைநகர் புதுதில்லிக்கு வந்தடைந்தது.
ஆகஸ்ட் மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு நிறுத்தப்பட்ட பின்னர், முன்மொழியப்பட்ட இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) குறித்து அமெரிக்க குழு இந்திய அதிகாரிகளுடன் முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்தும்.
ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கான அபராதமாக 25% வரி உட்பட இந்திய பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் 50% வரி விதித்ததன் பின்னணியில் இந்த வர்த்தக பேச்சுவார்த்தைகள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



