கனடாவிலிருந்து யாழ் வந்த இளம்பெண் புற்றுநோயால் உயிரிழப்பு

கனடாவில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் விடுமுறையைக் கழிப்பதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் குறித்த குடும்பத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் முதுகுவலி காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புற்றுநோய் இருப்பதாக மருத்துவ அறிக்கையின் மூலம் தெரியவந்தது.
மேலும், கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த 22 வயதான சத்தீஸ்வரன் சயினகா என்கிற யுவதி விடுமுறையைக் கழிப்பதற்காக தனது குடும்பத்தினரோடு கடந்த சில வாரங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
வடமராட்சி - கல்லுவம் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட யுவதி இறுதியாக தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதியின் இறுதிக் கிரியைகள் நாளை திங்கள் கிழமை கல்லுவத்தில் உள்ள அன்னாரின் பூர்வீக வீட்டில் இடம்பெறவுள்ளது.
குறித்த யுவதியின் திடீர் மரணத்தால் வடமராட்சி கல்லுவம் பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



