காணாமலாக்கப்பட்டோர் தினம்இன்று! வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டங்கள்

#SriLanka #Lanka4 #Missing #SHELVAFLY
Mayoorikka
15 hours ago
காணாமலாக்கப்பட்டோர் தினம்இன்று! வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டங்கள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆகஸ்ட் 30-ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை இலங்கையிலும் அனுஷ்டித்து வருகின்றனர்.

 ஐக்கிய நாடுகள் சபையினால், 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. 

 அரசியல், வன்முறை மற்றும் போர் போன்ற பிற காரணிகளால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவலுக்காகக் காத்திருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது. 

 இலங்கையில் தமிழர் தாயகப்பகுதிகளில் போர் நடைபெற்ற கடந்த 30 ஆண்டு காலப்பகுதி மற்றும் இறுதி போர் என்று அழைக்கப்படுகின்ற 2009ம் ஆண்டு வரையில் இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்டு, அல்லது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள்,ஒப்படைக்கப்பட்டவர்கள் என பெருமளவானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 

அவர்களின் உறவினர்கள் கடந்த 17வருடங்களுக்கு மேலாக தமது உறவுகளைத் தேடி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்றைய தினமும் வடக்கு கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி போராட்டங்கள் இடம்பெறுகின்றன. . 

இதேவேளை சில நாடுகளில் ஜனநாயக முறைமையை அல்லது விடுதலை சுதந்திரத்தை கோருபவர்களை அடக்கவோ, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடக்கவோ அல்லது பயங்கரவாதத்தை அடக்கவோ, காணாமல் போதலை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.

 மேலும் இலங்கையிலும் இறுதிக்கட்ட போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வௌிப்படுத்துமாறு வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் 1983 - 2009 வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது சுமார் 140,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

 இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 

 இவ்வாறான நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களை மீட்பதற்காக அவர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று(30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சக மனிதர்களை காணாமற்போகச் செய்வது போன்ற குற்றச்செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் பெரும் எண்ணமாகும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!