மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதி கோரி வடக்கு கிழக்கில் போராட்டம்!

#SriLanka #Protest #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
12 hours ago
மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதி கோரி வடக்கு கிழக்கில் போராட்டம்!

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதி கோருவதற்காக கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் இன்று இடம்பெற்று வருகின்றது. 

 முல்லைத்தீவு அந்தவகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முல்லைத்தீவு நகரில் இன்று கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.ஜுட்சன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

 இந்நிலையில் கையெழுத்திடும் செயற்பாட்டில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தபிசாளர் சி.லோகேஸ்வரன், முன்னாள் கரைதுறைப்பற்று தபிசாளர் க.விஜிந்தன், மாந்தை கிழக்கு உபதபிசாளர் வரதன் பிரதேச சபை உறுப்பினர்களான அமலன், பவுள்ராஜ், குணம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், கட்சி உறுப்பினர்கள், பங்குத்தந்தையர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!