வடமாகணத்திற்கு கிராமிய பாதைகள் மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு!

போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவை அமைச்சினுடாக வடமாகணத்திற்கு கிராமிய பாதைகள் மேம்படுத்துவதற்காக 7.109 பில்லியன் நிதியில்
1. யாழ்ப்பாணம் மாவட்டம் 1.19 பில்லியன்
2. கிளிநொச்சி மாவட்டம் 572 மில்லியன்
3. மன்னார் மாவட்டம் 2.059 பில்லியன்
4. முல்லத்தீவு மாவட்டம் 1.43 பில்லியன்
5. வவுனியா மாவட்டம் 1.85 பில்லியன் நிதி இவ்வருடம் வரவு செலவு திட்டத்தின் ஊடாக பாதைகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டதோடு.
அதற்கு மேலதிகமாக பிரதேச சபையில் பாதைகள் அமைப்பதற்காக வவுனியா, மன்னார், முல்லத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தலா 200 மில்லியன் அளவிலான நிதி மேலதிகமாக இவ்வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
அது தொடர்பாக இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் தோழர் பிமல் ரத்நாயக்க, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் தோழர் உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தோழர் ஜெகதீஸ்வரன் மற்றும் திலகநாதன் ஆகியோருடன் வவுனியா, மன்னார், முல்லத்தீவு, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. மேலும் வவுனியா மாவட்டத்தின் குருமன் காடு சந்தி மற்றும் மன்னார் A9 விதியை இணைக்கின்ற சந்திகளில் இரு வீதி சமிச்சை விளக்குகள் ( 2 colour lights) பொருத்துவதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் மன்னார் புத்தளத்தை இணைக்கின்ற கடற்கரையூடான பாதையின் Feasibility ஆய்வினை மேற்கொள்ள 100 மில்லியன் நிதி அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



