பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை குறைக்க கோரி இந்தோனேசியாவில் போராட்டம்
#Parliament
#Protest
#government
#Indonesia
#Salary
Prasu
2 hours ago

இந்தோனேசியாவில் உள்ள எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. இது அந்த நாட்டின் சராசரி வருமானமான ரூ.17 ஆயிரத்தை விட பல மடங்கு அதிகம் ஆகும்.
இதுதவிர பல்வேறு சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர்களது சம்பளத்தைக் குறைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில், பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
எனவே போராட்டத்தை ஒடுக்க கண்ணீர் புகைக்குண்டு வீசி பொதுமக்களை போலீசார் அங்கிருந்து விரட்டினர். இதனையடுத்து பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பதியில் ஆயிரக்கணக்கான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



