ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல- விஜித கேரத்
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
Mayoorikka
2 hours ago

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எந்த இராஜதந்திரிகளோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருப்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், அவை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கலும் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக செயல்படுத்தப்படுவதை சர்வதேச சமூகம் தற்போது அவதானித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



