இன்று முதல் பொது இடங்களில் வெற்றிலை எச்சிலை துப்பினால் அபராதம்

#SriLanka #Lanka4
Mayoorikka
2 days ago
இன்று முதல் பொது இடங்களில் வெற்றிலை எச்சிலை துப்பினால் அபராதம்

பொது இடங்களில் வெற்றிலை எச்சிலை உமிழ்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. 

 பேருந்து தரிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வெற்றிலை எச்சில் உமிழப்படுகின்றமை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட உரிய அரச நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. 

 எனினும் இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், பொது இடங்களில் வெற்றிலை எச்சிலை உமிழ்பவர்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் சட்ட நடவடிக்கையை எடுக்க தீர்மானித்துள்ளது. 

 வெற்றிலை எச்சிலை பொது இடங்களில் உமிழ்பவர்களுக்கு எதிராக குறைந்தப்பட்சம் 3,000 ரூபாவும் அதிகபட்சமாக 25,000 ரூபாவும் அபராதமாக விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து சாரதிகள் மற்றும் வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது வெற்றிலை எச்சிலை பாதைகளில் உமிழ்து செல்வதாக பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர். 

 இது தொடர்பில் விரைவில் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!