மொனராகலையில் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பெண் கிராம சேவகர் கைது
#SriLanka
#Arrest
#Women
#government
#Bribery
Prasu
2 months ago
கொவிதுபுர பகுதியைச் சேர்ந்த பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் கிராம சேவகர் பரவாய கிராம சேவையாளர் பிரிவில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுமாரி வாங்குவதற்காக 23,500 ரூபாய் பெறுமதியான பற்றுச்சீட்டை பெற்றுக் கொண்டிருந்தபோது, குறித்த கிராம சேவகர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண் கிராம சேவகர் சியம்பலாண்டுவ காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
