ரணில் விக்கிரமசிங்கவின் கைது பதவிக்கு அப்பாற்பட்ட சட்டம் - சிவஞானம் சிறீதரன் எம்.பி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, தவறிழைத்த எவரையும் தண்டிப்பதற்கு இலங்கைச் சட்டம் தயாராக உள்ளது என்பதை நிரூபிக்கிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் கைது சட்டத்திற்கு அமையவே மேற்கொள்ளப்பட்டதாகவும், இது இலங்கை அரசியல் வரலாற்றின் முதல் அத்தியாயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய ஜனாதிபதியைக் கைது செய்ய முடியுமான திருத்தத்தை ரணில் விக்கிரமசிங்க தனது ஜனாதிபதி பதவிக் காலத்திலேயே கொண்டு வந்தார் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.
"ஒருவரின் நிலைமை என்னவாக இருந்தாலும், தவறு செய்தால் எவரையும் தண்டிப்பதற்கு இலங்கைச் சட்டம் தயாராக உள்ளது என்பதை இது நிரூபிக்கிறது," என அவர் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், இந்த கைது வடக்கின் அரசியல் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறிப்பிட்டார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



