துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளித்தெறிப்படையும் ஸ்டிக்கர்களை ஒட்டிய பொலிஸார்!

வவுனியா நகரில் வாகன போக்குவரத்தினால் விபத்துக்கள் அதிகரித்த நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளித்தெறிப்படையக் கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸார் இணைந்து துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை முன்னெடுத்திருந்தனர்.
இரவில் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும் போது பின்னால் வரும் வாகனத்திற்கு துவிச்சக்கர வண்டியினை சரியாக தெரியதக்கதாக ஒளித்தெறிப்படையும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலை திட்டம் வவுனியா குருமன்காட்டுசந்தியில் நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டது
இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளமையுடன் இவ்வாறான ஒளியூட்டக்கூடிய பட்டிகள் போன்றவற்றை மாடுகளின் கழுத்துப்பகுதியில் கட்டும் சமயத்தில் கட்டாக்காளி மாடுகளினால் ஏற்படும் விபத்தினையும் தடுக்க முடியும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



