தெல்லிப்பளை பகுதியில் விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு! சடலத்தை இனங்காண கோரிக்கை!

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகீரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இருந்து 65-70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த உயிரிழப்புடன் தொடர்புடையவர் என தெரிவித்து ஒருவர் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றிரவு மேற்குறித்த பகுதியில் முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இவ் விபத்துடன் தொடர்புடையவர் என்ற வகையில், சந்தேக நபர் ஒருவர் தெல்லிப்பபளை பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.
அவர் வழங்கிய வாக்குமூலத்தில், பட்டா ரக வாகனத்தை நேற்றிரவு பின்பக்கமாக செலுத்தியபோது குறித்த முதியவர் தனது வாகனத்தில் சிக்குண்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த முதியவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே விபத்தில் சிக்குண்டு உயிரிழந்தவரின் சடலத்தை இணங்காண உதவுமாறு தெல்லிப்பளை பொலிசார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



