பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாட்டத்தில் 3 பேர் உயிரிழப்பு

#Death #Pakistan #Independence #GunShoot
Prasu
2 hours ago
பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாட்டத்தில் 3 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி பிறந்ததும் பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். சில இடங்களில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் பொறுப்பற்ற முறையில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய போது 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 வயது சிறுமி மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்தனர். அத்துடன் 60 பேர் காயம் அடைந்துள்ளனர்.

கராச்சி முழுவதும் இந்த விபரீதம் நடைபெற்றுள்ளது. சிறுமி அசிசாபாத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில், கோரங்கி என்ற இடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மீட்புப்படை அதிகாரிகள், இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு பொறுப்பற்ற இது அபாயகரமானது எனத் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!