பலூசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா
#America
#Pakistan
#Terrorists
#list
#Balochistan
Prasu
2 months ago
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப்படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
