மியான்மரின் தற்காலிக ஜனாதிபதி மியிண்ட் ஸ்வே மரணம்
#Death
#Hospital
#government
#President
#Myanmar
Prasu
2 months ago
மியான்மரில் கடந்த 2021ம் ஆண்டு தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான அரசாங்கத்தை ராணுவம் கவிழ்த்தது. அதன்பிறகு அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.
இதற்கிடையே ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய உடனே தற்காலிக அதிபராக மியிண்ட் ஸ்வே பொறுப்பேற்றார். பின்னர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையி்ல் தலைநகர் நேபிடாவில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. மியிண்ட் ஸ்வே மறைவுக்கு ராணுவ ஆட்சி தலைவர் மின் ஆங் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
