பணத்திற்காக பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த சீன நபருக்கு சிறைத்தண்டனை

சீனாவைச் சேர்ந்த ஒருவரிடம் 20க்கும் மேற்பட்டோர் மொத்தம் 280,000 அமெரிக்க டொலர்களை இழந்துள்ளதுடன், அவர்களில் ஐந்து பேர் அவரது முன்னாள் மனைவிகள் என்பது சோகமான சுவாரசியமாகும். இந்த மோசடியைச் செய்த நபருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2009 முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், 6 பெண்களை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துள்ளார். அவர்களில் கடைசி 5 பெண்களிடமிருந்து, அவர்களது குடும்பங்களைச் சேர்த்து, மோசடி வழியாக பணம் பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.
தான் ஒரு செல்வந்த வியாபாரி என்றும், தொழில் விரிவாக்கத்துக்காக முதலீடு தேவை என்றும், ஊழியர்களுக்கான சம்பளத்திற்கும் வீடு வாங்கவும் பணம் தேவை என்றும் கூறி, நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களிடமிருந்து பணத்தை வாங்கியுள்ளார்.
பணம் திரும்ப கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த மனைவிகள் விசாரணையைத் தொடங்கியபோதும், அவர் தொடர்ந்து “இன்னும் கால அவகாசம் தேவை” என்று தாமதிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில், 6வது மனைவி போலீசில் புகார் செய்ததன் மூலம் அவரது பன்முக மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. விசாரணை முன்னிலையில் குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டதுடன், “பெண்களை பழிவாங்கவே இவ்வாறு நடந்தேன்” என்ற அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலமும் பதிவு செய்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



