காசாவில் முன்னெப்போதும் இல்லாத அளவு பலியாகிவரும் குழந்தைகள்!

காசா பகுதியில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாக குழந்தைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இறந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் நிலவும் பரவலான பஞ்சத்தை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச சமூகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் டெட் சாய்பன் கூறினார்.
காசா பகுதி மற்றும் இஸ்ரேலுக்கு விஜயம் செய்த பின்னர், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், காசா பகுதிக்கு உணவு, பால் பவுடர் மற்றும் சுகாதாரப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கிட்டத்தட்ட 1,500 லாரிகளை அனுப்ப ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் தயாராக உள்ளது என்றும், ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான லாரிகள் மட்டுமே அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தற்போதைய தேவைக்கு இது போதுமானதாக இல்லை என்றும் துணை நிர்வாக இயக்குநர் கூறினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




