இன்றைய ராசிபலன் (02.08.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
10 hours ago
இன்றைய ராசிபலன் (02.08.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன


மேஷம்:

அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் சிறு தடைகள் ஏற்படும். 

பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் செயல்கள் லாபமாகும். 

கார்த்திகை 1: நினைத்ததை சாதிப்பீர்கள் என்றாலும் வேலையில் கவனமாக இருப்பது நன்மையாகும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.

ரோகிணி: நீண்டநாள் பிரச்னைக்கு முடிவு காண்பீர். வரவேண்டிய பணம் வரும்.

மிருகசீரிடம் 1,2: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். 

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

திருவாதிரை: குடும்பப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். 

புனர்பூசம் 1,2,3: மனம் குழப்பமடையும். உங்கள் புத்திசாலித்தனத்தால் நெருக்கடிகளை சமாளிப்பீர்.  

கடகம்:

புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரித்தாலும் வருமானத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். உடல் சோர்வடையும்.

பூசம்: விலகிச்சென்ற உறவுகள் உங்களைத் தேடிவருவர். எடுத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.

ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும்.

சிம்மம்:

மகம்: வரவால் வளம் காணும் நாள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். 

பூரம்: வியாபாரத்தின் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு ஆதாயம் காண்பீர்.

உத்திரம் 1: வரவேண்டிய பணம் வரும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துப்போவது நன்மையாகும். 

கன்னி:

உத்திரம் 2,3,4: வருவாய் அதிகரிக்கும். சொத்துப் பிரச்னையை பேச்சு வார்த்தையால் முடிவிற்கு கொண்டு வருவீர். 

அஸ்தம்: உழைப்பு அதிகரிக்கும். உங்கள் ஆற்றல் வெளிப்படும். முயற்சியில் வெற்றி காண்பீர்.

சித்திரை 1,2: புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும்.  

துலாம்:

சித்திரை 3,4: தெளிவுடன் செயல்படும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். 

சுவாதி: பிறரை நம்பி எந்த வேலைகளையும் இன்று ஒப்படைக்க வேண்டாம். கவனம் அவசியம். 

விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்.

விருச்சிகம்:

விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மனதில் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். 

அனுஷம்: சிலர் உங்களைக் குறைசொல்வர். அதற்கு பதில் சொல்ல வேண்டாம்.

கேட்டை: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். கடன் கொடுப்பதை இன்று தவிர்க்கவும்.

தனுசு:

மூலம்: லாபமான நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். 

பூராடம்: எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர். நண்பர்கள் உங்களுக்கு உதவுவர்.  

உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். நவீன பொருட்கள் சேர்க்கை உண்டாகும்.  

மகரம்:

உத்திராடம் 2,3,4: கனவு நனவாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

திருவோணம்: உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும். 

அவிட்டம் 1,2: தொழிலில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: பொது நலனில் கவனம் செல்லும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும்.

சதயம்: வியாபாரத் தடை நீங்கும். நண்பர்கள் வழியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். 

பூரட்டாதி 1,2,3: பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். பிறருக்காக இன்று உங்களை மாற்றிக் கொள்வீர்.  

மீனம்:

பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். மனதில் தேவையற்ற பயம் உண்டாகும்.
 
உத்திரட்டாதி: குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். பணியிடத்தில் வீண் பிரச்னையை சந்திப்பீர். 

ரேவதி: உங்கள் முயற்சி இழுபறியாகும். அவசர செயல்களிலும் இன்று தடைகளை சந்திப்பீர்.  

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754087234.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!