யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு

#SriLanka #Jaffna #Death #Police #Investigation
Prasu
1 month ago
யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞன் அருகில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து விட்டு வீடு திரும்பும் பொழுது வீட்டுக்கு முன்னால் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இளைஞன் இவ்வாறான நிலையில் காணப்படுவதை பார்த்த உறவினர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வச்சந்திரன் மிமோஜன் எனும் 27 வயதுடைய இளைஞனே உயிரிழந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது கால் பாதத்தில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753982116.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!