காசாவில் 3 இடங்களில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிப்பு
#people
#Food
#Israel
#War
#Gaza
#ceasefire
Prasu
3 months ago
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் காசாவில் உள்ள மூன்று பகுதிகளில் தனது இராணுவ நடவடிக்கைகளில் திட்டமிடப்பட்ட “தந்திரோபாய” இடைநிறுத்தத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
ஏனெனில் அது உணவு மற்றும் மருந்துப் பொருட்களைப் பெறுவதற்காக உதவி வழித்தடங்களைத் திறப்பதாக அறிவித்துள்ளது.
காசா நகரத்திற்கான இராணுவ நடவடிக்கைகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இடைநிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இடைநிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு நாளும் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச உதவி குழுக்களுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று COGAT தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
