யாழில் மதுபோதையில் மாதா சிலையை சேதப்படுத்திய குழு - NPP அமைப்பாளர் உட்பட 8 பேர் கைது

#Jaffna #Arrest #Church #statue #NPP
Prasu
11 hours ago
யாழில் மதுபோதையில் மாதா சிலையை சேதப்படுத்திய குழு - NPP அமைப்பாளர் உட்பட 8 பேர் கைது

மது போதையில் 20 பேர் கொண்ட குழு அடாவடி..! மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் மகிமைமிக்க மாதா சுருவத்தை மது போதையில் உடைத்து சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் வேலணையைச் சேர்ந்த 8 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 8 பேரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவிக்கையில், மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் மாதா சுருவத்தை மது போதையில் இருந்த 20 பேரடங்கிய கும்பல் ஒன்று உடைத்து சேதப்படுத்தியதாக குறித்த ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொலிஸார் துரித நடவடிக்கையில் இறங்கி அந்தக் கும்பலை கைது செய்தனர்.

images/content-image/1753550323.jpg

ஏனையோர் கைதானவர்களின் தகவலின் அடிப்படையில் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர்கள் எனத் தெரிவித்தனர். அத்துடன் விசாரணைகளையடுத்து குறித்த நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 20 பேர் அடங்கிய குழுவினர் குறித்த ஆலயத்தின் பகுதியில் இருந்து மது அருந்தியதாகவும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் சுற்றுலாவுக்காக வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுடன் தகாத வார்த்தைகளால் நக்கல் கதைகள் கூறி முரண்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

images/content-image/1753550391.jpg

இவ்வாறான பின்னணியில் கடும் மது போதையில் இருந்த குறித்த குழுவினர் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 50 இலட்சம் பெறுமதியான மாதா சுருவத்தை அடித்து முழுமையாக உடைத்து சேதமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கிறிஸ்தவ ஆலயத்தின் சுருவத்தின் நிலை கண்ட குறித்த ஆலய நிர்வாகத்தினர் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்து சமயத்தைச் சேர்ந்த தரப்பினர் உடைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பொலிஸார் நிலைமையை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கையில் ஈடுபட்டதன் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உட்பட 8 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753550424.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!