துருக்கியில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற 10 தீயணைப்பு வீரர்கள் மரணம்

#Death #Turkey #WildFire
Prasu
1 month ago
துருக்கியில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற 10 தீயணைப்பு வீரர்கள் மரணம்

துருக்கியின் எஸ்கிசெஹிர் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. இந்தக் காட்டு தீயில் சிக்கி இதுவரை பல ஏக்கர் எரிந்து நாசமாகி உள்ளன. 

தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து அதனை அணைக்க முயன்று வருகின்றனர். இதில் பல ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. எனினும் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

இந்நிலையில், பலத்த சூறாவளி காற்று வீசியதால் காட்டுத் தீயின் திசை மாறியது. தீயணைப்புப் பணியில் இருந்த மீட்புப்படையினர் அதில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களில் 10 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்த 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காட்டுத் தீயில் சிக்கி கருகி பலியான தீயணைப்பு வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் எர்டோகன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753474727.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!