பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் நான்கு சிறுவர்கள் உயிரிழப்பு!
#India
#School
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
4 months ago
இந்தியாவின் ராஜஸ்தானில் இன்று (25) காலை பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரச பாடசாலையின் ஒற்றை மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளதுடன், விபத்து நடந்த நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர சுமார் 40 மாணவர்கள் உள்ளே இருந்தனர்.

கட்டடம் பாழடைந்த நிலையில் இருந்ததுடன், இது தொடர்பாக முன்னர் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
