காசாவில் பெரும் பட்டினி!
#world_news
#Gaza
#famine
Soruban
3 months ago
காசா முழுவதும் பெரும் பட்டினியின் பேரழிவில் இருப்பதாக சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்தநிலையில் காசாவை சென்றடையும் உதவிகளின் அளவு, அந்த மக்களுக்குத் தேவைப்படுகின்ற தேவையில் ஒரு துளி மாத்திரமே என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. காசாவில் பசி நெருக்கடி இதுவரை இவ்வளவு மோசமாக இருந்ததில்லை என்றும் சர்வதேச அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மேலும் இரண்டு பேர் இறந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் பட்டினியால் ஏற்பட்ட இறப்புக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
