குஜராத்தில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நால்வர் கைது
#India
#Arrest
#Gujarat
#Terrorists
Prasu
1 day ago

அல்கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நால்வரைக் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தீவிரவாத செயல்களுக்கு ஆட்களைச் சேர்த்து வந்தது தெரியவந்துள்ளது.
அவர்களில் இருவர் குஜராத்திலும், ஒருவர் டெல்லியிலும், மற்றொருவர் நொய்டாவிலும் கைதாகியுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்நாட்டுக் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



