முல்லைத்தீவில் திடீர் பரிசோதனை :மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கண்டுபிடிப்பு!
#SriLanka
#Food
#Human
#Mullaitivu
Soruban
5 months ago
மாங்குளம் பொது சுகாதார பிரிவிலுள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள், பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்றையதினம் (23) திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மாங்குளம் பொது சுகாதார பிரிவிலுள்ள கரிப்பட்டமுறிப்பு, ஒலுமடு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது இன்றையதினம் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
