மும்பையில் பரபரப்பு: ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம்!
#India
#Flight
#Mumbai
#Runway
Soruban
4 months ago
கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் கனமழை பெய்து வரும் சூழலில், கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது.

சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்தார். அசம்பாவிதம் எதுவும் இன்றி விமானம் நிறுத்தப்பட்டது. எனினும் ஓடுபாதையில் சிறிய சேதம் ஏற்பட்டதாகவும் பயணிகளும்இ பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
சிறிய தாமதங்களைத் தவிர வேறு எந்த விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
