இஸ்ரேலில் இலங்கை இளைஞர்கள் பயணித்த பேருந்து- தீ விபத்து
#SriLanka
#Israel
#fire
Lanka4
1 month ago

2025 ஜூலை 19 இன்று, இஸ்ரேலில் விவசாய சேவையில் ஈடுபட்டு வந்த இலங்கை இளைஞர்கள் பயணித்த பேருந்தொன்று தீப்பிடித்து முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
இவ்விபத்து தொடர்பாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா ஊடகங்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். பேருந்து பயணம்நடைபெற்று கொண்டிருந்த வேளையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீயால் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ள நிலையில், உயிர்சேதம் சம்பந்தமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக இஸ்ரேலில் பயணிக்கும் இலங்கைப் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தும் புதிய கேள்விகள் எழுந்துள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



