5 000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் இன்டெல் நிறுவனம்

உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான இன்டெல் ஜூலை மாதத்தில் 5 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. மறுசீரமைப்பு திட்டம், நிதி இழப்பை சரி செய்தல் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா, ஒரேகான், அரிசோனா, டெக்சாஸ் மாகாணங்களில் வேலைப் பார்க்கும் பொறியாளர்கள், மூத்த தலைவர்கள் (Senior Leaders), அலுவலக ஸ்டாஃப்கள் வேலை இழப்பை சந்திக்க இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு 15 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் தற்போது 5 ஆயிரம் பேரை நீக்குகிறது. ஒரேகான் அலுவலகத்தில் இருந்து மட்டும் 2,392 பேரை நீக்க திட்டமிட்டுள்ளது.
முன்னதாக 500 பேரை நீக்க திட்டமிட்ட நிலையில் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. கலிபோர்னியா அலுவலகத்தில் 1,935 பேரை நீக்குகிறது.
சிப் டிசைன், கிளவுட் சாஃப்ட்வேர் (Cloud Software), யுனிட் தயாரிப்பு பிரிவில் உள்ள பொறியாளர்கள் இந்த வேலை நீக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



