சாதனை படைத்த மட்டுவில் வடக்கு சந்திர மௌலீச வித்தியாலய மாணவி நந்தகரன் மதுரா

#SriLanka #Jaffna #Examination #Girl
Prasu
3 hours ago
சாதனை படைத்த மட்டுவில் வடக்கு சந்திர மௌலீச வித்தியாலய மாணவி நந்தகரன் மதுரா

அண்மையில் வெளியாகிய க.பொ.த(சா/த) பரீட்சையில் தோற்றி அனைத்து பாடங்களிலும் A தரச் சித்தியினைப் பெற்றுள்ளார் இந்த மாணவி. 

எந்தவிதமான தனியார் கல்வி நிலையங்களுக்கும் செல்லாமல் தனித்து பாடசாலை ஆசிரியர்களின் துணையுடனும் தனது அயராத முயற்சியாலும், நந்தகரன் மதுரா என்ற இந்த மாணவி இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

யா/ மட்டுவில் வடக்கு சந்திரமௌலீச வித்தியாலயத்தில் கல்வி கற்ற இந்த மாணவி தனது குடும்ப வறுமை நிலை காரணமாக, தனது சிறு வயது தொடக்கம் பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்வதை இடைநிறுத்தி பாடசாலையில் தனக்கு கல்வி கற்கும் ஆசிரியர்களின் உதவியுடனும் தனது அயராத முயற்சியாலும் தனது வாழ்வில் இந்த வெற்றியை பெற்றுள்ளாா்.

உண்மையில் இந்த மாணவியின் முயற்சி என்பது நம் சமூகத்திற்கு சிறந்ததொரு முன்னுதாரணமாகும். மட்டுவில் சந்திரமௌலீசா வித்தியாசாலையில் 199 மாணவர்கள் மட்டுமே கல்வி கற்று வருகிறார்கள். 

இந்த மாணவி கல்வி கற்ற தரம் 11 இல் 12 மாணவர்கள் மட்டுமே கல்வி கற்றார்கள். இவ்வாறு மிகவும் வசதி குறைந்த பாடசாலையில் பாடசாலைக் கல்வியை மட்டும் தனது வழிகாட்டியாக வைத்து தனது அயராத முயற்சியால் அனைத்து பாடங்களிலும் A தரச் சித்தியை பெற்றுள்ளார்.

இந்த மாணவியின் அயராத முயற்சிக்கு நல்ல வழிகாட்டியாக இருந்த பாடசாலை ஆசிரியர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னா் இந்த மாணவியின் குடும்பம் மட்டுவிலில் இருந்து மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள தங்கள் சொந்த இடத்திற்கு மீளக்குடியா்ந்துள்ளதுடன் இந்த மாணவி கணிதப் பிாிவில் தனது உயா்தரக் கல்வியை, தெல்லிப்பழை யூனியல் கல்லுாாியில் தொடரவுள்ளாா்.

இந்த மாணவியின் எதிர்காலம் சிறக்கவும் தனது வாழ்வில் மேலும் பல உயா்வுகளை பெற்றுக் கொள்ளவும், எல்லாம் வல்ல எங்கள் ஈஸ்வாியாம் தெல்லி நகா் அன்னை என்றும் துணை நிற்க மனதார வேண்டி நிற்கின்றோம்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் 
முகத்திரண்டு புண்ணுடையர் 
கல்லா தவர்(குறள்)

பொருள்:-கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே ஆவா், கல்லாதவர் முகத்தில் இருப்பது  இரண்டு கண்கள் அல்ல அவை இரண்டு புண்கள் ஆகும்.

நன்றி

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752789402.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!