அமெரிக்காவில் காலிஸ்தான் தீவிரவாதி உள்பட 8 இந்திய வம்சாவளியினர் கைது

#Arrest #America #Indian #khalistan #Terrorists
Prasu
5 hours ago
அமெரிக்காவில் காலிஸ்தான் தீவிரவாதி உள்பட 8 இந்திய வம்சாவளியினர் கைது

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோவாகின் கவுண்டி பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தில்ப்ரீத் சிங், அர்ஷ்ப்ரீத் சிங், அம்ரித்பால் சிங், விஷால், பவிட்டர் சிங், குர்தாஜ் சிங், மன்ப்ரீத் ரந்தாவா,சரப்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இக்கும்பல் சித்ரவதை, சதித்திட்டம், சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். 

இவர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பவிட்டர் சிங் படாலா, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

அவரை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாககூறப்படும் குற்றச்சாட்டில் இந்திய தேசிய புலனாய்வு முகமை தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752432426.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!