ஏமனில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் குண்டுவீச்சில் உயிரிழப்பு
#Death
#children
#BombBlast
#football
#Yemen
Prasu
5 hours ago

ஏமன் நாட்டின் தென்மேற்கில் உள்ள தைஸ் மாகாணத்தில் அல்-ஹாஷ்மா பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் குண்டுவீச்சில் உயிரிழந்தனர்.
ஏமன் அரசுடன் கூட்டணியில் உள்ள இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் போராளிகள் குழுவால் பீரங்கி குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏமன் மனித உரிமைகள் குழு, இந்த சம்பவத்தைக் கண்டித்து, குழந்தைகளின் சிதைந்த உடல்களின் புகைப்படங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இறந்த சிறுவர்களில் இருவர் 12 வயதினர், மற்ற இருவர் 14 வயதினர் என்றும், ஐந்தாவது குழந்தையின் வயது தெரியவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




