260 உயிர்களை காவுக்கொண்ட ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் அகமதாபாத்தில் 260 பேர் கொல்லப்பட்ட பயங்கர விமான விபத்துக்கு, இயந்திரங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறுதான் முக்கிய காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
லண்டனுக்கு பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதியது.
விமானத்தில் இருந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் இறந்தனர்.
இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் அறிக்கையின்படி, விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சின் எதிர்பாராத இயக்கம் இயந்திரங்களுக்கு எரிபொருள் வழங்குவதைத் தடுத்தது.
விமானத்தின் 'கருப்புப் பெட்டியில்' பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் தெரியவந்தது, இதில் 49 மணிநேர விமானத் தரவு மற்றும் இரண்டு மணிநேர காக்பிட் குரல் அடங்கும்.
தொடர்புடைய விசாரணை அறிக்கையின்படி, இரண்டு இயந்திரங்களிலும் உள்ள எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் '1 வினாடி இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக RUN இலிருந்து CUTOFF க்கு மாற்றப்பட்டபோது' விமானம் 180 நாட்ஸ் வேகத்தை எட்டியது.
பதிவு தரவுகளின்படி, ஒரு விமானி மற்றவரிடம் 'RUN to CUTOFF' ஐ ஏன் மாற்றினார் என்று கேட்டார். இருப்பினும், மற்ற விமானி தான் அவ்வாறு செய்யவில்லை என்று பதிலளித்தார்.
இதன் விளைவாக, தொடர்புடைய சுவிட்சை அதன் அசல் நிலைக்குத் திருப்பி அனுப்பும்போது விபத்து ஏற்பட்டது. இந்தக் கட்டுப்பாட்டு சுவிட்ச் தானாகவே இயங்காது.
மேலும் இது விமானிகளால் செய்யப்படும் பணியாகும்.
எரிபொருள் சுவிட்ச் இந்த வழியில் பழுதடைவது 'மிகவும் அரிதானது' என்று விமான ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



