ட்ரம்பின் வரி விதிப்பு! சர்வதேச சந்தையில் தங்க விலையில் பாரிய மாற்றம்

#world_news #Gold
Lanka4
2 days ago
ட்ரம்பின் வரி விதிப்பு! சர்வதேச சந்தையில் தங்க விலையில் பாரிய மாற்றம்

சர்வதேச வர்த்தக பதற்றம் மற்றும் அமெரிக்க டொலரின் பலவீனம் காரணமாக சர்வதேசத்தில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்ததை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேசத்தில் நேற்றையதினம் தங்கத்தின் விலை 0.2 வீதம் அதிகரித்து அவுன்ஸ் ஒன்றுக்கு 3,320.58 டொலராக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவிலும் நேற்று தங்க விலை 0.3 வீதத்தினால் உயர்ந்துள்ளதுடன் வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டொலர் குறியீடு 0.2 வீதத்தினால் சரிந்துள்ளதாக தெ வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கையிட்டுள்ளது. இதேவேளை, சர்வதேச பொருளாதார மாற்றங்களினால் கடந்த சில நாட்களாக இலங்கையில் தங்க விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!