ட்ரம்ப்: யுக்ரைனுக்கு ஆயுத விநியோகங்களை மீண்டும் தொடக்கம்

#world_news #Ukraine
Lanka4
17 hours ago
ட்ரம்ப்: யுக்ரைனுக்கு  ஆயுத விநியோகங்களை மீண்டும் தொடக்கம்

யுக்ரைனுக்கு முக்கியமான ஆயுத விநியோகங்களை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

யுக்ரைனுக்கான ஆயுத விநியோகங்களை இடைநிறுத்த உத்தரவிட்ட சில நாட்களில், டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த மாற்றுத் தீர்மானம் வெளியாகியுள்ளது. இதன்படி, அமெரிக்கா யுக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்ப வேண்டியிருக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். 

அவர்கள் இப்போது மிகவும் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். எனவே, நாங்கள் முதன்மையாகத் தற்காப்பு ஆயுதங்களை அனுப்பப் போகின்றோம் என்று டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், யுக்ரைன் உடனான போர் நிறுத்தத்துக்கு உடன்படாத நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!