இன்றைய ராசிபலன் (09.07.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:
அசுவினி: நெருக்கடி நீங்கும் நாள். நேற்றுவரை இருந்த பிரச்னைகள் தீரும்.
பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வேலையில் நிம்மதி ஏற்படும்.
கார்த்திகை 1: பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். நினைத்த வேலைகளை முடிப்பீர்கள்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் என்பதால் சங்கடம் உண்டாகும்.
ரோகிணி: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் எதிர்பார்ப்பில் தடை உண்டாகும்.
மிருகசீரிடம் 1,2: போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். வியாபாரத்தில் சில பிரச்னைகள் தோன்றும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். தடைகளைத் தாண்டி வெற்றியடைவீர்கள்.
திருவாதிரை: செவ்வாய் கேதுவால் முயற்சி வெற்றியாகும். வியாபார சூட்சுமங்கள் புலப்படும்.
புனர்பூசம் 1,2,3: கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் காண்பீர்.
கடகம்:
புனர்பூசம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். ஆறாமிட சந்திரனால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.
பூசம்: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும்.
ஆயில்யம்: வருமானம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு இன்று வெளிப்படும்.
சிம்மம்:
மகம்: நம்பிக்கை அதிகரிக்கும். குருப் பார்வைகளால் எடுத்த வேலைகள் முடியும்.
பூரம்: உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். தொழிலில் உங்கள் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும்.
உத்திரம் 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும்.
அஸ்தம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். பத்தாமிட சூரியனால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.
சித்திரை 1,2: திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை ஏற்படுத்தும். உடலும் மனமும் சோர்வடையும்.
துலாம்:
சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
சுவாதி: சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கூடும்.
விசாகம் 1,2,3: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விசாகம் 4: மனக்குழப்பம் தீரும். வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் வேலைகள் முடியும்.
அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
கேட்டை: தெளிவுடன் செயல்பட்டு தேவைகளை அடைவீர். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும்.
தனுசு:
மூலம்: கவனமுடன் செயல்படவும். சொந்த பிரச்னைகளை பிறரிடம் கொண்டு செல்ல வேண்டாம்.
பூராடம்: மனதில் குழப்பம் ஏற்படும். எந்த ஒன்றிலும் கவனம் செலுத்த முடியாமல் சங்கடப்படுவீர்.
உத்திராடம் 1: வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: எதிர்பாராத செலவு ஏற்படும். வாகனம் பழுதாகி உங்களை சங்கடப்படுத்தும்.
திருவோணம்: உங்கள் செயல்களில் நெருக்கடி ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
அவிட்டம் 1,2: எச்சரிக்கையாக செயல்படுங்கள். அவசர வேலைகளையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர்.
சதயம்: நீங்கள் நினைப்பது நிறைவேறும். தொழிலை விரிவு செய்வதுபற்றி யோசிப்பீர்.
பூரட்டாதி 1,2,3: நண்பர்களால் வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.
மீனம்:
பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். வேலையின் காரணமாக வெளியூர் பயணம் ஏற்படும்.
உத்திரட்டாதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோக நெருக்கடி நீங்கும்.
ரேவதி: உங்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



