அல்வரோடா மாளிகை சென்ற பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு

#India #PrimeMinister #Brazil #NarendraModi
Prasu
6 hours ago
அல்வரோடா மாளிகை சென்ற பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பிரதமர் மோடி ஏற்கனவே 3 முறை பிரேசில் சென்றுள்ளார்.

முதலில் ஜூலை 2014ம் ஆண்டில் சென்றார். 2019ம் ஆண்டில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பங்கேற்றார். கடந்த ஆண்டு நவம்பரில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என மொத்தம் 3 முறை சென்றுள்ளார்.

தற்போது ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மீண்டும் பிரேசில் சென்றுள்ளார்.

இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலியா நகரில் உள்ள அல்வோராடா மாளிகைக்குச் சென்றார்.

அப்போது பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் அதிபர் லூலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1751992508.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!