உலகில் ஒருவருக்கு மட்டுமே உள்ள இந்த ரத்த வகையின் சிறப்பு என்ன??

'க்வாட நெகடிவ்' (Gwada Negative) என்றழைக்கப்படும் உலகின் 48வது இரத்தப் பிரிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரத்தப்பிரிவு உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
அவர் பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் க்வாடலூப் (Guadeloupe) என்ற தீவை பூர்வீகமாக கொண்டவர். அந்த இடத்தை குறிக்கும் வகையிலேயே இந்த இரத்தப்பிரிவுக்கு 'க்வாட' நெகடிவ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இரத்தப்பிரிவை பிரான்ஸ் நாட்டின் தேசிய ரத்த முகமையான Établissement Français du Sang (French Blood Establishment) கண்டறிந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பை சர்வதேச குருதியேற்றல் அமைப்பு (International Society for Blood Transfusion) அங்கீகரித்து, PIG7 எனப்படும் உலகின் 48வது ரத்தப்பிரிவாக அடையாளப்படுத்தியுள்ளது.
2025 ஜூன் மாதம் வரையில் உலகில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே இந்த ரத்தவகை இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.



