சூதாட்டத்திற்காக வங்கியில் பண மோசடி செய்த மேலாளர் கைது

#India #Arrest #Bank #Official #Fraud
Prasu
4 hours ago
சூதாட்டத்திற்காக வங்கியில் பண மோசடி செய்த மேலாளர் கைது

கோடக் மஹிந்திரா வங்கி கிளை மேலாளர் சூதாட்டத்திற்காக ரூ.31 கோடி பொதுப் பணத்தை மோசடி செய்துள்ளார். 

இந்திய மாநிலமான பீகாரில் உள்ள கோட்​டக் மஹிந்​திரா வங்​கி​யின் ஒரு கிளை மேலா​ளர் சூதாட்​டம் மற்​றும் பந்தய செயலிக்கு அடிமையாகி உள்ளார். 

இவர், கடந்த 2 ஆண்டுகளாக பீகார் அரசின் பொது பணத்தில் இருந்து கோடிக்கணக்கில் திருடியுள்ளார். அந்த பணத்தை வைத்து பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தியுள்ளார். 

குறிப்பாக, பிஹார் அரசின் மாவட்ட நிலம் கையகப்​படுத்​தல் அதி​காரிக்​கான காசோலைகளில் கையெழுத்து போட்டும் காசோலை குளோனிங் மூலமாகவும் ரூ.31.93 கோடியை மோசடி செய்​துள்​ளார்.

இதில் இருந்து மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக வாடிக்கையாளர்களின் ஆதார் மற்​றும் கேஒய்சி விவரங்களை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதை வைத்து 21 போலி வங்​கிக் கணக்​கு​களை திறந்​துள்​ளார். 

இதன் மூலமாக பணத்தை பரிமாற்றம் செய்து வெளிநாடுகளில் உள்ள பந்தய செயலிக்கு பணம் அனுப்பியுள்ளார். 

இதையடுத்து, வங்கி ஊழியர் ஒருவர் கடந்த 2021-ம் ஆண்டில் சந்தேகம்படும்படியான ஆர்​டிஜிஎஸ் பரிமாறத்தைக் கண்டுபிடித்த போது தான் இந்த மோசடி வெளிவந்துள்ளது. பின்னர், கோடக் மஹிந்திரா வங்கி கிளை மேலாளர் கைது செய்யப்பட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1751960617.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!