புதிய அரசியல் கட்சி ஆரம்பித்த மஸ்க் - டிரம்ப் கடும் அதிருப்தி!

அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் எலன்மஸ்க்கின் புதிய அரசியல் கட்சியை அபத்தமானது என வர்ணித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மஸ்க் தவறான பாதைக்கு திரும்பிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக கட்சிக்கும் குடியரசுகட்சிக்கும் சவாலாக விளங்கும் என எலன்மஸ்க் கருதும் அவரது புதிய கட்சியை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மூன்றாவது கட்சியொன்றை ஆரம்பிப்பது அபத்தமானது என நான் கருதுகின்றேன்,அமெரிக்கா எப்போதும் இரண்டு கட்சி நாடாகவே இருந்து வந்துள்ளது என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் மூன்றாவது கட்சியை ஆரம்பிப்பது குழப்பத்தை மேலும் அதிகரிக்கும் என கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.மஸ்க் தவறான பாதையில் செல்வது குறித்து நான் கவலையடைந்துள்ளேன் குறிப்பாக கடந்த ஐந்து வாரங்களாக அவர் முற்றாக தவறான பாதையில் செல்வது குறித்து கவலையடைந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.



