இஸ்ரேல் பிரதமருக்கு பொது மன்னிப்பு வழங்க கோரிக்கை விடுத்த டிரம்ப்
#America
#Israel
#President
#Trump
#Netanyahu
Prasu
2 months ago

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் வழக்கை இரத்துச் செய்யுமாறும் அவருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலுக்கு நிறையச் சேவை செய்த பெருந்தலைவர் என டிரம்ப் குறிப்பிட்டார். 2019 ஆண்டில் பெஞ்சமின் நெதன்யாகு மீது ஊழல், நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
அவர் அவற்றை மறுக்கிறார். நெதன்யாகு மீதான நீதிமன்ற வழக்கு இம்மாதம் 3ஆம் திகதி தொடங்கியது. வழக்கு ஓராண்டு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசெக் ஹெர்சொக்கிற்கு (Isaac Herzog) உள்ளது.
எனினும் மன்னிப்பு வழங்கும்மாறு விண்ணப்பம் எதுவும் வரவில்லை என இஸ்ரேலிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



