பாகிஸ்தானில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 18 பேர்

#Death #Pakistan #Flood #HeavyRain #family
Prasu
2 months ago
பாகிஸ்தானில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 18 பேர்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் 4 பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

பக்துன்க்வா மாகாணத்திற்கு சுற்றுலா வந்த குழுவின் ஒரு பகுதியினர் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்), ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்ததால் இழுத்துச் செல்லப்பட்டனர்.

மீட்புப் படையினர் ஐந்து வெவ்வேறு இடங்களில் அவர்களை தேடிவருகின்றனர். இந்த நிலையில் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 

18 பேரில் யாரும் பிழைக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது. ஸ்வாட் ஆறு, பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வற்றாத நதிகளில் ஒன்றாகும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1751053645.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!